
திசையன்விளை அடுத்த பனங்காட்டில் காரில் எரிந்த நிலையில் கிடந்த 4- உடல்களை மீட்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்திலிருந்து, கல்விளை செல்லும் சாலையில், 100 மீட்டர் தொலைவில் உள்ள பனங்காட்டில், கார் ஒன்று எரிந்த நிலையில் காணப்பட்டது.
அந்த வழியாகத் தோட்டத்திற்கு சென்றவர்கள், இது குறித்துத் திசையன்விளைக் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், எரிந்த காரை பார்த்தபோது, முன்னிருக்கையில் ஆண் ஒருவரும், பின்னிருக்கையின் நடுவில் பெண்ணும், இருபுறமும் இரண்டு குழந்தைகளும் எரிந்து கருகிக் கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்துத் தடயவியல் வல்லுநர்கள் விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்தனர்.
இது குறித்து தகவல் அறந்த, மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து, காவல்துறையினர் காரில் கருகி கிடந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர். விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா, அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் எனத் தெரியவந்தது. மேலும், சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் சென்னையில் உள்ள சொந்த வீட்டை விற்றுவிட்டு நாகர்கோவிலுக்குச் சென்ற நிலையில், திசையன்விளை அருகில் காட்டுப்பகுதியில் காருடன் எரிந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது….




