Advertisements

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மிக அருகில் நெருங்கி விட்டது அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட பரபரப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்
அந்த வகையில், அதிமுக தரப்பில் ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது . இந்த கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு சவால் விடும் படியான ஒரு கூட்டணியாக பார்க்கப்படுகிறது .
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளை பெற்றது என்பதை கணக்கீடு செய்யும் பொழுது அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது . தற்போதைய அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் , புரட்சி பாரதம் , தென் இந்திய பார்வர்டு பிளாக் , புதிய நிதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணியில் இணைந்துள்ளன .
இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி கலந்து கொண்ட மதுராந்தகம் கூட்டத்தில் ஒரே மேடையில் கைகோர்த்து நின்றார்கள். இந்த கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்றது என்பது பற்றி ஒரு ஆய்வு செய்த போது கிட்டத்தட்ட அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அருகாமையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 33.29 சதவீத வாக்குகளை பெற்றது அதாவது ஒரு கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410 வாக்குகள் பெற்றது மொத்தம் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது .
அதிமுக கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது . இதில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதாவது 2. 62% வாக்குகள் பெற்றது . இதே போல் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது அதாவது 3.80 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றது . டிடிவி தினகரன் தலைமையிலான, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2.4 சதவீத வாக்குகளை பெற்றது.
இந்த கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. புதிய நீதி கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டது இதில் தோல்வி அடைந்தது 0.1க்கும் குறைவான வாக்கு சதவீதம் பெற்றது . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன . அனைத்து தொகுதிகளிலும் இந்த கட்சி தோல்வியை தழுவியது .
புரட்சி பாரதம் கட்சி , கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த கட்சிக்கு சைபர் புள்ளி இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கி கிடைத்தது . கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆக சேர்ந்து 44 சதவீத வாக்குகளை பெற்றன . இந்த நிலையில். தற்பொழுது அதிமுக திமுக தவெகக நாம் தமிழர் என நான்கு முனைபோட்டி நிலவுகிறது .
இது போன்று நான்கு முனை போட்டி நிலவினால் 45 சதவீத வாக்குகள் என்பது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முந்தைய தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 39 , சதவீதமும் அதிமுக கூட்டணிக்கு 36 சதவீதமும், தமிழக வெற்றி கழகத்திற்கு 15 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கணக்குடு செய்யப்பட்டது .
தற்போதைய சூழ்நிலையில், அதிமுக கூட்டணிக்கு பழைய வாக்கு வங்கியை கணக்கிட்டால் 45 சதவீத வாக்குகள் பெற வாய்ப்பு இருக்கிறது. எனவே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் வருகிற சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய போட்டியாக நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Advertisements


