ஓபிஎஸ் கட்சி 2 ஆக உடைகிறது: தேமுதிக இறுதி டீல் முடிவு.!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாத ஓபிஎஸ் கட்சி இரண்டாக உடைகிறது . பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது.  பிப்ரவரி 3ஆம் தேதி இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகிறது .
திமுக கூட்டணியுடன் ராமதாஸ் இணைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் இன்னமும் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார் . வருகிற சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடப் போவதில்லை மாறாக அவரது மனைவி போட்டியிடப் போகிறார் .
அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை நடத்தி வந்த ஓ பன்னீர்செல்வம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாமல் திண்டாடி வருகிறார் . அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைமை நிர்வாகிகள் அனைவரும் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவி விட்ட நிலையில் , தற்பொழுது மூத்த தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே இருந்து வருகிறார் .
கூட்டணி பற்றி சரியான முடிவு எடுக்க முடியாததால் ஓ பன்னீர் செல்வத்திற்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் தற்பொழுது மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் வலை விரிக்கப்பட்டிருக்கிறது.  எனவே அவர் எந்த நேரமும் தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என்று சூழ்நிலை இருக்கிறது.
இதன் மூலம் ஓ பன்னீர் செல்வத்தின் கட்சி அமைப்பு இரண்டாக உடைவது மட்டுமல்ல ஓ பன்னீர்செல்வம் தனித்து விடப்படுகிறார் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .இதற்கிடையே கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது . திமுக மேல் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது தற்பொழுது உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது .
இறுதி கட்டமாக ஆறு சட்டமன்ற தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுகின்றன . இது தவிர 150 கோடி ரூபாய் பணமும் வழங்கப்படுவதாக பேசப்பட்டு இருக்கிறது . மேலும் ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்ற வகையில் 150 கோடி ரூபாய் இன்னமும் வராகடனாக இருக்கிறது. அதனை வசூலித்து தருவதாகவும் திமுக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது . இது தவிர தேர்தலுக்குறிய செலவுகளையும் திமுகவே மேற்கொள்ளும் என்றும் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டிருக்கிறது .
இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் வருகிற பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுகிறார். இதனிடையே திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை இணைப்பதில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது.  இது குறித்து தொல் திருமாவளவனை திமுக மேலிடம் சமராச படுத்தி வருகிறது.
தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சூழ்நிலையில் திடீரென தொல் திருமாவளவன் பெங்களூர் சென்று இருக்கிறார்.  எனவே ராமதாஸ் இணைப்பு என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை . இதற்கிடையே அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிகிறது .
அவர் ராஜ்யசபா எப்பி பதவியை குறிவைப்பதாக சொல்லப்படுகிறது.  தற்பொழுது அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக சொல்கிறார்கள் . இதில் ஏதாவது ஒரு தொகுதியில் டிடிவி தினகரன் மனைவி போட்டியிடுவதாக தெரிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *