
இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில், இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப், போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 ஓவரில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடந்து, இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


