Advertisements
பஞ்சாப்- பீகார் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் ரயில்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய பயணிகள்…!
பஞ்சாப் பதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையத்திலிருந்து பீகாரில் உள்ள சஹாசா வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. பயணம் செல்வதற்காக ஆயிரக் கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.
ரயில் ரத்து என்ற அறிவிப்பு வந்தவுடன் கோபம் அடைந்த பயணிகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் விரைந்து வந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.