‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நிறைவு..ஷூட்டிங் முடித்து திரும்பிய ரஜினி, நெல்சன்!

Advertisements

ஜெயிலர் படத்தின் பாகம் இரண்டின் படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் நெல்சனும் நடிகர் ரஜினிகாந்தும் சென்னைத் திரும்பினர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் பாகம் இரண்டின் சில காட்சிகள் எடுப்பதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்து பாலக்காடு சென்றனர்.

பின்னர், படக்குழுவினர் குறிப்பிட்ட காட்சிகளை எடுத்ததையடுத்து இயக்குனர் நெல்சனும் நடிகர் ரஜினிகாந்தும் மீண்டும் சென்னை திரும்பினர்.

இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினியை அங்கிருந்து ரசிகர்கள் தலைவா என்று கூறி அழைத்து வரவேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *