வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை – தங்கம் தென்னரசு விமர்சனம்..!

வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், ஆழம் தெரியாமல் காலைவிட்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் புஸ்வானமாக மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி, இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *