ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட்.!

தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் வேளையில், மு.க. ஸ்டாலின் குறித்து வெளியான சமீபத்திய கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், CNN NEWS 18 செய்தி ஊடகம் கருத்துக்கணிப்பை  நடத்தி இருக்கிறது.  இதில், முதலமைச்சருக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 32.8% மக்களும், நன்றாக இருக்கிறது என 7% மக்களும், பரவாயில்லை என 12.3% மக்களும் தெரிவித்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அடுத்த முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு.. மு.க.ஸ்டாலின் – 41.2% , எடப்பாடி பழனிசாமி – 37.5%, விஜய் 14.9%
என மக்கள் பதிலளித்துள்ளதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வாக்களர்களின் பிரதான பிரச்சனை என்ன என்கிற கேள்விக்கும் பதிலலும் கிடைத்திருக்கிறது. அதில் பெண்களின் பாதுகாப்பு – 17.8%, சட்டம் ஒழுங்கு – 17.3%, மது மற்றும் போதை – 16.9%,  வேலையிண்மை பிரச்சனை – 15.5%, ஊழல் 7.2%, வளர்ச்சியின்மை – 5.2, விலைவாசி உயர்வு – 5.2, மொழி திணிப்பு – 4.4  ஜனநாயக அமைப்புக்கான ஆபத்து – 4.1% என மக்கள் பதிலளித்துள்ளதாக சிஎன்என் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல தற்போதைய எம்எல்ஏ மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிப்பீர்களாக என்கிற கேள்விக்கு நிச்சயமாக என – 35.9% மக்களும் நிச்சயமாக வாய்ப்பில்லை என – 28.7% மக்களும், வாய்ப்பில்லை என – 18.7% மக்களும் சொல்வதற்கில்லை என – 11.1% மக்களும் ஒருவேளை வாக்களிக்கலாம் என – 5.6% மக்களும் பதிலளித்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *