
தில்லியில் தனியார் உயர்கல்வி நிறுவனத்தின் மேலாளர் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியர் புகார் அளித்ததால் அவர் தலைமறைவாகியுள்ளார்.
சிருங்கேரி சாரதா மடத்துடன் தொடர்புடைய பார்த்தசாரதி என்பவர் தில்லியில் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிலையத்தின் மேலாளராக இருந்தார். இந்த நிறுவனத்தில் உயர்கல்விப் பட்டய மேலாண்மைப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினர் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவியர் 32 பேர், அவர் தங்களுக்கு ஆபாசமாகச் சேதி அனுப்பியதாகவும், தவறான நோக்கத்தில் தங்களைத் தொட்டதாகவும் கூறி வசந்த் கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள பார்த்தசாரதியைப் பிடிக்க அனைத்துப் போக்குவரத்து முனையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

