சம்பளத்துடன் கூடிய விடுமுறை..!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில்  ஏப்ரல் 9 ஆம் தேதியும் மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23,29 ஆம் தேதிகளிலும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனை செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர்  நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைதொடர்ந்து, வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் அச்சமும் இல்லாமல் வாக்களிகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *