கத்தார் பிரதமருடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

Advertisements

தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை சந்தித்ததில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை சந்தித்தார்.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடுகள், இணைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்ததாகக் கூறினார். நமது மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தாகத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *