
71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் ‘ஜவான்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டது.
தமிழில் சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு திரௌபதி முர்மு வழங்கினார். இதே படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ‘வாத்தி’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.
அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அணிந்து வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.தமிழில் சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு திரௌபதி முர்மு வழங்கினார்.
இதே படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ‘வாத்தி’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பெற்றுக் கொண்டார். அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அணிந்து வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.



