
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியின் நடைபெற்று வருகிறது. விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
இதில் சிறந்த தமிழ் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது.
அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார். ‘வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார். மேலும், நடிகை ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
கேரளா ஸ்டோரி படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது.


