ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான்- இலங்கை இன்று மோதல்..!

ஆசிய தொடர் கோப்பை போட்டியின் நான்காவது சுற்றில் இன்று பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதல் உள்ளது.
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் 17 ஆவது ஆசிய தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகி உள்ளது. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் 3 ஆவது ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
மேலும், சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி வங்காளதேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியைச் சந்தித்துள்ளன. தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. பின்னர், இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *