Bomb threat:மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை: சென்னையிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மும்பையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.

விமானம் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டது. அதில் சந்தேகப்படும்படியான பொருள் ஏதும் சிக்கியதாகத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவத முறையாகும். கடந்த வாரம் டில்லியிலிருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நேற்று, டில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *