உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்பு..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்றார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றுடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது

அப்போது அவர் பேசியதில் , தனி நபர் கடமைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் நிறுவனத்தின் பொது நலன் மற்றும் எண்ணங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறந்த பலம் என்பதை தான் உணர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.மேலும், அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க தரவு யுக்தி திட்டமிடலை செயல்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *