
நாசா நிலவுக்கு அனுப்பியுள்ள ஆர்ட்டிமிஸ் 2 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் பூமியைப் படம்பிடித்து அனுப்பியுள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா புளோரிடாவில் இருந்து ஆர்ட்டிமிஸ் 2 என்கிற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது.
இந்த விண்கலத்தில் ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா கோச், ஜெரிமி ஹான்சேன் உள்ளிட்ட நால்வர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நால்வருடன் நிலவை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ள ஆர்ட்டிமிஸ் 2 விண்கலம் இந்திய நேரப்படி பகல் பதினொன்றரை மணிக்குப் புவியில் இருந்து ஒரு இலட்சத்து 42 ஆயிரம் மைல் தொலைவுக்குச் சென்றுள்ளது. அது நிலவை அடைய இன்னும் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் மைல்கள் உள்ளன.
இந்நிலையில் ஆர்ட்டிமிஸ் 2 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைப் படம்பிடித்து அனுப்பியுள்ளனர். அதில் புவியின் கடற்பரப்பு, நிலப்பரப்பு, மேகக்கூட்டங்கள், கடல் நீரோட்டங்கள் ஆகியன வெவ்வேறு நிறத்தில் அழகாகக் காணப்படுகின்றன.


