அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு – கேட்டி சார்லோட் போல்டர் அபார வெற்றி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் கரோல் யங் சு லீயை வீழ்த்தி கேட்டி சார்லோட் போல்டர் வெற்றி பெற்றுள்ளார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் கரோல் யங் சு லீ, இங்கிலாந்தின் கேட்டி சார்லோட் போல்டருடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய கேட்டி சார்லோட் போல்டர் 6-4, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் கரோல் யங் சு லீயை வீழ்த்தினார். இதன்மூலம் கேட்டி சார்லோட் போல்டர் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *