Advertisements

பிரபல நடிகர் கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் செங்கல்பட்டைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் நடைபெறுகிறது.
பிரபல நடிகர் கவின் ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘லப்பர் பந்து’ திரைப்படப் புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்.
இத்திரைப்படம் பழைய படத்தின் தலைப்பாக இருந்தாலும், தற்காலத்திற்கு ஏற்ற வகையில் கிராமத்துக் கதைக்களம் கொண்ட படமாக எடுக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் செங்கல்பட்டைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisements


