தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்குக் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சண்டையிடக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்குக் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.