
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் நியாயவிலைக் கடைகள் முறையாகச் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ், திமுக இடையிலான கூட்டணி தமிழகத்தைப் போலப் புதுச்சேரியிலும் பொருந்தாக் கூட்டணியாக உள்ளதாகக் கூறினார்.
மத்தியில் முன்பிருந்த காங்கிரஸ் அரசும், இப்போதுள்ள பாஜக அரசும் புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்காதது ஏன்? என்று வினவிய விஜய், மாநிலத் தகுதி பெறுவதற்குச் சட்டப்படி முயற்சி செய்யப்போவதாகக் கூறினார்.




