ஈஸ்டர் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா.?

Advertisements

ஈஸ்டர் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ..இதன் முக்கியமான நோக்கம் என்ன..? இந்த நாளில் கிருஸ்தவ மக்கள் ஏன் அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..!

ஈஸ்டர் பண்டிகை உலகமெங்கிலும் கிறிஸ்துவை விசுவாசிக்கும் மக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்பட கூடிய  பண்டிகை தான் இது…ஈஸ்டர் என்ற வார்த்தை, கிரேக்க மொழி மற்றும் கிரேக்க மதத்திலிருந்து வந்தது ஆகும். இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்ததெழுதலும் பற்றிய தான பின்னணிதான் புனித வெள்ளி (சிலுவையில் உயிர் தியாகம் செய்த நாள்) மற்றும் ஈஸ்டர் (மூன்றாம் நாள்) உயிர்த்தெழுந்த நாளை குறிக்கிறது.

இந்த ஈஸ்டர் பண்டிகை, ஒரே மாதத்திலோ, அல்லது ஒரே நாளிலோ வருவது இல்லை . மேலும் ,  கிறிஸ்துமஸ் பண்டிகையை போல் டிசம்பர் மாதத்தில் 25ஆம் தேதியில் கொண்டாடப்படுவது போல், ஈஸ்டர் திருநாள் குறிக்கப்பட்ட ஒரு நாளில் அனுசரிக்கப்படுவதில்லை.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஈஸ்டர் தேதி மட்டும் ஏன் மாறி மாறி வருகிறது தெரியுமா?..எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாகி வெளியேறியது ஆபிப்  மாதம் 14ஆம் தேதி ,அன்று இரவு ஒரு பௌர்ணமி தினமாகும்.

ஆபிப்  மாதம் என்பது மார்ச்- ஏப்ரல் மாதத்தை குறிக்கிறது. இது வசந்த காலத்தின்  ஆரம்ப காலமாகும். ஆரம்ப காலகட்டத்தில் யூதர்கள் ஆபிப்  மாதம் 14ஆம் தேதியை ஈஸ்டர் பண்டிகையாக  கொண்டாடினார்கள் .ஆனால் புறஜாதி விசுவாசிகள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஈஸ்டர்  பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கிபி 325 இல் தீர்மானம் போடப்பட்டது .அதன்படி மார்ச் 21ஆம் தேதிக்கு பிறகு வரும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை என கணக்கிடப்படுகிறது. இதன்படி தான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை இன்று ஏப்ரல் 05 – ம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது..புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள்  உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது.

மேலும் , ஈஸ்டர் என்பது இயேசுவின் பாடுகளின் உச்சகட்டமாகவும் , அதற்க்கு முன்னதாக 40 நாள் உண்ணாவிரதம் , பிராத்தனை உள்ளடங்கிய தவக்காலமாக உள்ளது .. ஈஸ்டர் பண்டிகையில் . ஈஸ்டர் முட்டைகள் வழங்கப்படுவது வழக்கம்.. அதே போல இதன் நோக்கமாக சொல்லப்படுவது என்னவென்றால் , இந்த ஈஸ்டர் முட்டையை புதிய வாழ்க்கை மற்றும் மறுபிறப்பை குறிக்கின்றன…

இந்த ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா.?

இயேசு நம் பாவங்களுக்காக மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் . கிறிஸ்துவத்தின் முதுகெலும்பும் அடிப்படை சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் தான் இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த  பிறகு அவர் 40 நாட்கள் இவ்வுலகில் தங்கி இருந்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கும் அவரைப் பின்பற்றிய அனைவருக்கும் காட்சியளித்து பேசினார் என்று வேதாகமத்தில் கூறப்படுகிறது.

ஈஸ்டர் என்றால் மரணத்தின் மீது வெற்றி என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து மரணத்தையும், அவருடைய உயிர்தெழுதலையும் நினைவுகூறவும், அதை எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதை வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது. எனவே வேதாகமத்தின் விதிகளின்படி நாம் அவருடைய புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் நாளைக் கொண்டாட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

இயேசு உயிர்த்தெழுந்ததால் தான் நமக்கு பாவ மன்னிப்பு கிடைக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம் நாமும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.  இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளை நினைவில் கொண்டு அவர் சாயலில் நாமும்  வாழ்வோம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *