Salem AIADMK Leader murder:எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் சல்லி சல்லியாய் வெட்டிப் படுகொலை.. சேலத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

Advertisements

சேலத்தில் அதிமுக பகுதி செயலாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான முன்னாள் மண்டல குழுத் தலைவர் சண்முகம் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் (54). இவருக்கு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு ரியல் எஸ்டேட் அலுவலகத்திலிருந்து பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சண்முகத்தை சல்லி சல்லியாய் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் இன ஏராளமான குவிந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. சண்முகத்தை கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமா அல்லது அரசியல் காழ் புணர்ச்சியா? தொழில் போட்டியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சண்முகம், கடந்த 2011 முதல் 2016 வரை, சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழுத் தலைவர் பதவி வகித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *