Advertisements

பிரதமருக்கு எதிராக சட்டவிரோத செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பதிவில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவிருந்தப் பிரதமர் மோடியின் மீது, காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் தொடுக்கச் சதித் திட்டம் தீட்டியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இதுநாள் வரையிலும் சொந்தக் கட்சிக்குள் மாறி மாறி அடிதடி போட்டுக் கொண்டிருந்தக் காங்கிரஸ் கட்சி, இன்று நாட்டின் அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடியே குறி வைக்குமளவிற்குத் துணிந்திருப்பது மிகவும் ஆபத்தான குறியீடு என்றார்.
தொடர்ந்து, போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததற்குப் பாராளுமன்றத்திற்குள் வைத்து பழி தீர்க்க முயன்ற காங்கிரஸ் எனும் சமூகவிரோத அமைப்பை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறினார். மேலும், பிரதமருக்கு எதிராக இப்படியொரு சட்டவிரோத செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisements


