இந்தியாவிலேயே சென்னை பெருநகரம் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் எனக் காவலர்களுக்குப் பெண் காவல் ஓய்வு இல்லத்தைத் திறந்து வைத்துச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோர் கூறினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோர் சென்னை வால்டேக்ஸ் சாலையில் பெண் காவலர்களுக்குப் பெண் காவல் ஓய்வு இல்லத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர்.மகளிர் காவலர்களுக்குக் காவல் துறைக்குச் சொந்தமான இடத்தில் மிக அதிகமான நாட்களாகப் பராமரிப்பு காலியாக உள்ள இடத்தை 21 அறைகள் உள்ளிட்ட 57 பேர் தங்கம் அளவிற்கு வசதியுள்ள பெண்கள் காவலர்கள் தங்கம் இடத்தை இன்று திருத்து வைத்தோம்,
வெளியூர்களிலிருந்து வரும் மகளிர் காவலர்களுக்குத் தங்க ஏதுவாக இருக்க இதைத் திறந்து வைத்துள்ளோம், இது சமையலறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் உள்ளது, சென்னை வடக்கு மாவட்டம் காவல்துறை சார்பாக அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
வேறு எந்த மாவட்டத்திலும் இந்த அளவுக்கு மகளிர் காவலர்கள் இல்லை அதனால் இங்கு அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டுமா அதை அவர்களுக்காகச் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக ஏற்படுத்தியிருக்கிறோம், ஏற்கனவே இந்தியாவிலேயே சென்னை பெருநகரமாகப் பாதுகாப்பான இடம் எனக் கூறியிருக்கிறார்கள்,
இன்னும் பெண்கள் பாதுகாப்பில் அதிகமான அக்கறை செலுத்த காவல்துறை முன் வந்தது வருங்காலங்களில் இன்னும் காவல்துறை பெண்களுக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பட வழி வகை செய்யப்படும்,
இரவு நேரங்களில் பணியாற்றும் பெண் காவர்களுக்கு பாதுகாப்பு முறையாக அந்தந்த காவல் நிலையத்திற்கு உள்ள அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெறுவதால் அவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சனைகள் எதுவும் இல்லை,
காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து நடவடிக்கைகளை ஏற்கனவே தயாராகக் காவல்துறையினர் செய்து வருகிறார்கள், பொதுமக்கள் தங்களின் கடமையை உணர்ந்து பொங்கல் தினத்தைப் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தேவையான வேலைகளைக் காவல்துறை செய்து வருகிறது, அதற்கான குழுக்களை அமைத்து ஆலோசனை செய்து அதற்கான பணிகள் தினமும் நடைபெற்று வருகிறது, வருகின்ற ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அதற்கான விவரங்கள் வெளியிடப்படும்
போதைப்பொருள் என் டி பி எஸ் சட்டத்தின் கீழ் வருகிறது ஆனால் மாத்திரைகள் அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது கொண்டு வர முடியாது மாத்திரைகளை மருந்தகத்தில் மருத்துவர் சீட்டுகள் வாங்குகிறார்கள் இது கொரியர் மூலமாகவும் அதை வாங்குகிறார்கள் அதைக் கண்காணிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,எனச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோர் கூறினார்.
