காணாமல் போனவர்கள் ஆயிரக்கணக்கானோர்..!

ரஷ்யாவுடனான போரில் இதுவரை 55 ஆயிரம் வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த போரில் பல ஆயிரம் பேர் உயிரிழக்கச் செய்யப்பட்டனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, உக்ரைனில் போர்களத்தில்   உயிர் மாய்க்கம் செய்யப்பட்ட  ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 55 ஆயிரம் வீரர்கள் என்றும் பெருமளவிலான வீரர்கள் காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தார்.

இறந்த வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டு 31 ஆயிரம் ஆகவும் கடந்த ஆண்டில் 46 ஆயிரம் ஆகவும் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து இருப்பது போரின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.  ரஷியா சார்பில் 3 லட்சத்து 25 ஆயிரம் பேரும், உக்ரைன் சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேரும் உயிரிழந்து இருக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *