அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!

Advertisements

புதுச்சேரி: 

புதுச்சேரி அமைச்சரிடம் அரசு ஹோட்டலை விலைக்குக் கேட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

புதுச்சேரியில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி களை நடத்துவதற்கு இயக்குனரும் நடிகை நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அதன்படி நேற்று இரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க சட்டப்பேரவைக்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன், ஷூட்டிங் சைட் மேனஜர் குமரன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அவர் இல்லாததால், சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இடம் தேவையெனக் கூறியதாகத் தெரிகிறது. பழைய துறைமுக வளாகத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது, அங்கு வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம். அதற்கான ஜிஎஸ்டியுடன் கூடிய கட்டண விபரங்களை அமைச்சர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, கடற்கரையோரம் உள்ள சீகல்ஸ் ஓட்டல் (அரசுக் கட்டிடம்) பார்க்க நன்றாக இருக்கிறது. அதனை விலைக்குக் கொடுக்கலாமேயென இயக்குனர் விக்னேஷ் சிவன் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அமைச்சர், அது அரசுக் கட்டிடம், அங்குச் சுற்றுலாத் துறை ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். தெரிந்துதான் கேட்கிறீர்களா? என அமைச்சர் கேட்டுள்ளார். நிகழ்ச்சி நடத்துவதற்கு வேறிடம் காட்டுகிறோம், போய்ப் பாருங்கள் எனக்கூறிவிட்டு அமைச்சர் அந்த இடத்திலிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *