தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சி..!

Advertisements

பந்தநல்லூர் அருகே பாப்பாக்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேலுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இரண்டு மாதங்கள் முன்பு பழனிவேலின் வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு முற்றிலும் இடிந்ததால்,அவர் குடும்பத்தினர் வசிக்க வீடு இல்லாமல் தவித்துள்ளனர்.

இதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தின் சமூக ஊடக அணி இணை ஒருங்கிணைப்பாளர்கள் பழனிவேலுக்கு ரூ1.5 லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தந்தனர்.

இதற்காக பாப்பாக்குடியில் வீடு வழங்கும் விழா நடந்தது.அதில் தவெக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வினோத்,மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி கோபிநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும்,பழனிவேலின் மூத்த மகளின் உயர்கல்விக்கு உதவித் தொகையாக ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *