
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய கேம்ரான் கீரின் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், கேப்டன் சுமன் அதிரடியாக விளையாடி 86 ரன்கள் எடுத்தார்.





