நாகர்கோவில் – தாம்பரம் இடையே புறப்படும் ரெயிலுக்கு முன்பதிவு தொடக்கம்.!

நாகர்கோவில்-தாம்பரம் இடையே 18-ந்தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு  நாளை முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு இரயில்வே தெரிவித்தள்ளது.

பொங்கல் பண்டிகை நிறைவடைந்து வருகின்ற  19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பேருந்துகள்   மற்றும் ரெயில்கள் இயக்கப்படுவதோடு  கூடுதலாக சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு இரயில் வருகின்ற 18-ந்தேதி மாலை 5 மணிக்கு  நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த அதிவேக சிறப்பு ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என்றும்  இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை  தொடங்கும் என்றும் தெற்கு இரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *