ரீல்ஸ் எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்கிறார் ஸ்டாலின் : தமிழிசை குற்றச்சாட்டு

Advertisements

நாட்டில் கொடூரமான மரண ஓலம் நடந்து கொண்டிருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சென்னையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு விளம்பரம் பண்ணிக்கொண்டு இருப்பதாகத் தமிழிசை தெரிவித்துள்ளார்.
வேடநத்தத்தில் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை,  பா.ஜ.க. மூத்தத்  தலைவர் தமிழிசை-சௌந்திரராஜன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர்களுக்குப் பத்து இலட்சம் ரூபாய் வழங்கிய திமுக அரசு, மாணவி கொலை தொடர்பாக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

கொடூரமான மரண ஓலம் நடந்து கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் அதைப் பற்றிக் கவலைப்படாமல், சென்னையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு, விளம்பரம் பண்ணிக்கொண்டு இருப்பதாகத் தமிழிசை-சௌந்திரராஜன் தெரிவித்தார்.
பேட்டி

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *