தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை.!

Advertisements

தென்கொரியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்திய வழக்கில் தென்கொரிய அதிபர் அதிபர் யூன் சுக் யோல் க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக் யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். தொடர்ந்து, ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார்.

இவ்விவகாரத்தால், யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், ராணுவ சட்டம் அமல்படுத்தியது தொடர்பாக யூன் சுக் யோலுக்கு எதிரான சில குற்றச்சாட்டுகளில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது .

மேலும், அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காகவும் யூன் சுக் யோலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *