மாடவீதிகளில் உலா வந்த அங்காளபரமேஸ்வரி..!

Advertisements

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூரில்  அங்காளபரமேஸ்வரி அம்மன் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கீழ்ப்பெண்ணாத்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் 73ஆம் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதில் நாள்தோறும் அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வருதல்,  அம்மன் வேடமணிந்து மயானக் கொள்ளை, வள்ளான கண்டி சம்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரோட்ட நாளில் அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு பொதுமக்கள் பொங்கல் வைத்தனர். பின்பு கரகாட்டம்,  கட்டைக்கால் ஆட்டம், நாட்டுப்புற நடனம், வேடம் அணிந்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அங்காளபரமேஸ்வரி அம்மன் தேரில் அமர்ந்து முக்கிய மாடவீதிகளில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *