
ஆதரவாளர்களை வைத்து வன்முறையில் ஈடுபடும் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி சட்டப்பேரவைத்தலைவர் புதுச்சேரி துணைநிலைஆளுநர்மற்றும் காவல்துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சி புகார் மனு வழங்கியது.
நேற்று (08/03/2024) காலாப்பட்டு மீனவர் பகுதியில் மீன் இறங்குதளம் அமைப்பதற்காகக் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருந்தது.
இந்நிகழ்வை அறிந்த அப்பகுதி மக்கள் திரளாகச் சென்று மக்களின் கோரிக்கை தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வேண்டும் அதனை அமைத்தபிறகு மீன் இறங்கு தளம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்கள்சட்டமன்ற உறுப்பினர்கல்யாணசுந்தரம் அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் கூறி கூறினார். நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர்.காமராஜ் கல்யாணசுந்தரம்மிடம் எங்களுக்குத் தூண்டில் வளைவு மட்டுமே நிரந்தர தீர்வு அதை விடுத்து வெறும் கருங்கற்களை கொட்டுவதால் எந்த ஒரு தீர்வும் எட்டாது என்று கூறினார்.
இதனால் கோபமடைந்த கல்யாணசுந்தரம் உனக்குப் பதில் சொல்லும் வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை என்றும் நீங்கள் கேட்கும்கேள்விகளுக்கு எதற்கும் பதில் சொல்ல முடியாது எனறும் மிரட்டும் விதமாகவும் அவருடைய ஆதரவாளர்களோடு அடிப்பதற்கும் வன்முறை தூண்டும் விதமாகவும் செயல்பட்டார்.
நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ் அவர்களின் மீதுகாழ்ப்புணர்ச்சியோடு மிரட்டும் விதமாகச் செயல்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் மாண்பினை கெடுக்கும் விதமாக நடந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனச் சட்டப்பேரவை தலைவர் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ் கோரிக்கை மனு வழங்கினார்.
நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ் மற்றும் அவர்ககுடும்ப உறவுகளுக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி புதுச்சேரிமாநிலம் துணை நிலை ஆளுநர் காவல்துறை இயக்குநர் அவர்களிடமும் மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார்
மாநிலப்பொருளாளர் ம.செ.இளங்கோவன் திவாகர் தட்டாஞ்சாவடி தொகுதி இரமேசு இலாசுப்பேட்டை தொகுதி செயலாளர் நிர்மல்சிங் இளைஞர் பாசறை தலைவர் மணிபாரதி மீனவர் பாசறை செயலாளர் வினோத் வில்லியனூர் மதியழகன் வீராசாமி மணவெளிதொகுதி செயலாளர் கோகுல் முகுந்தன்
உருளையன்பேட்டை ராஜ்கமல் சிவக்குமார உப்பளம் தொகுதி வேலு மகளிர் பாசறை கற்பகவள்ளி அனைவரும் பங்கேற்றனர்.



