Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 10.03.2024

Advertisements

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் பணிகளை நீங்கள் எளிமையாகக் கையாள வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்களிடம் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.  உங்களுக்கு அதிக செலவுகள் காணப்படும். எனவே பணத்தை மிச்சம் பண்ண முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். அதே சமயம் குடும்ப பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். எனவே கடினமாக உழைக்க வேண்டும்.  பணவரவு அதிகமாகக் காணப்படாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  எதிலும் உறுதியாகச் செயல்பட வேண்டிய நாள்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில சண்டைகள் உருவாகும். அதனால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கழிப்பது நல்லது.  பணவரவு போதுமானதாக இருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு   சிறந்த நாளாக இருக்காது. அனைத்து செயல்களிலும் கவனம் தேவை.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பணவரவு திருப்தி தராது.  தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. அனைத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
விலைமதிப்பு மிக்க பொருட்கள் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பணிகளை முடிக்கக் கொஞ்சம் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள்.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக அமையும். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள்.  உங்கள்மேல் அக்கறை காட்டும் மற்றும் உங்களை அதிகம் புரிந்து கொண்ட ஒரு நண்பரைச் சந்திப்பீர்கள்.  உங்கள் வாழ்க்கைத் துணைக்காக அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உங்களிடம் நம்பிக்கை அதிகமாகக் காணப்படும்.  உறவினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.  உங்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்துடன் உங்களின் பொன்னான நேரத்தைச் செலவிடுவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.  நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி உங்களை வந்து சேரும். உங்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படாது. சந்தோசம் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  உங்களிடம் நம்பிக்கை அதிகமாகக் காணப்படும். நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள்.  நீங்கள் சுற்றுலா செல்லும் வாய்ப்பு இருக்கிறது.  பணவரவு அதிகமாகக் காணப்படும். சந்தோசம் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே அமைதியாக இருப்பது நல்லது. உங்கள் நேரத்தை நண்பர்களுடன் செலவிடுவது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையிடமும் அமைதியை கடைபிடித்து நல்லது.  பணவரவு போதுமானதாக இருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  இனிமையான நாளாக இருக்கும். கூடுதல் வேலை இருக்கும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். எனவே நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனால் அதிகமாகச் செலவு செய்வது குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சி நிரம்பிய நாளாக இருக்கும். உங்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுடன்  அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்.  நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *