
குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் கூட்டு சாலை அருகே உள்ளஅருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் கோயில் கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் மூலவர் அன்னை முத்து மாரியம்மன், தனித்தனியாக கோயில்கொண்டுள்ள விநாயகர், முருகர், நாகதேவதைகள், வாராகி அம்மன் கோயில்களுக்குகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையொட்டி யாக சாலை அமைத்து பட்டு வஸ்திரங்கள்,தானிய வகைகள்,மலர் வகைகள்,பழ வகைகள்,வாசனை திரவியங்கள்,உள்ளிட்டவை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழுங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலங்களுக்கு வேத மந்திரங்கள் முழுங்க மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டனர் பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைமுன்னிட்டு நான்காம் பூஜை, மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம், கலச புறப்பாடு அதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனைநடைபெற்றனமகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
கே.எம்.ஜி.கல்லூரித் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வி.ராமு, கொண்டசமுத்திரம் ஊராட்சித்தலைவர் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமார், துணைத் தலைவர்ராஜாத்திதமிழ்ச்செல்வன்,


