
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்ஸ்ரீ திரௌபதியம்மன ஆலயத்தில் ஆலயத்தில் சுமார் 29 அடி கொண்ட கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய வளாகத்தில் சுமார் 7 லட்சம் மதிப்பில் 29 அடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாகக் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், கொடிமரம் அபிஷேகம், மூலமந்திர ஹோமம், கருவறையில் சாமிக்கு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மேளதாளம் வேதமந்திரங்கள் முழங்கக் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று, புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்களுக்குத் தெளிக்கப்பட்டது. இதில் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கோயில் தர்மகத்தா பெருமாள், விழாக்குழு தலைவர் தங்கராஜ், செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் செல்வகுமார், இணை செயலாளர்கள் சம்பத், ராமலிங்கம், ரமேஷ், சக்திவேல், சத்யராஜ், ராஜவேல், காந்தி, மணிகண்டன், விஸ்வநாதன், ஆகியோர்

