School Students Atrocities: பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டூழியம்!

Advertisements

பூந்தமல்லியில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டூழியத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் குட்டி பச்சையப்பன் காலேஜ் என்னும் தோனியில் வலம் வரும் மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறுவது ரூட்டு தல உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இன்ஸ்டா பேஸ்புக் லைக் மோகத்தில் பல்வேறு சேட்டைகள் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்..இந்த நிலையில் அதேபோல பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட தயாரான பேருந்து ஒன்றின் மீது ஏரி மாணவர்கள் சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர், நடத்துனர் இதனை கண்டு அவர் தனது செல்போனில் படம்பிடிப்பதை கண்ட மாணவர்கள் அலரி அடித்து ஓடினர் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது..

சென்னை கோயம்பேடுக்கு அடுத்து புறநகர் பகுதியில் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட பேருந்து நிலையமாக விளங்கியவரும் பூந்தமல்லியில் சென்னை, சென்னை புறநகர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் ஆந்திரா,கர்னாடக உள்ளிட்ட மாநிலத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயங்கி வருவதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

பள்ளி கல்லூரி வேலைக்கு செல்வோர் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகப்படியானோர் பயணித்து வரும் நிலையில்,, ஒருபுறம் காதலர்கள் அட்டூழியம், மறுபுறம் மாணவர்கள் அராஜகம் குடிமகன்களின் புகழிடமாக பேருந்து நிலைய வளாகம் விளங்கி வருவதால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது பூந்தமல்லி போலீசார் சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *