கரூர் துயர சம்பவதில் இத்தனை உயிர் எப்படி பலியானது என்பது குறித்து விசாரிக்க, அவசியம் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் நிறுவனரும், தேசிய தலைவருமான டாக்டர் ஐசக்-அய்யா தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர் பேட்டையில் உள்ள அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின், தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிறுவனரும், தேசிய தலைவருமான டாக்டர் ஐசக்-அய்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியது என்றும், கூட்டத்திற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற போது, பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கட்சி தலைவர் மட்டுமல்ல, ஒரு பிரபலமான நடிகர் என்றும், அவரை காண பொதுமக்கள் கூடுவார்கள், அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கரூர் துயர சம்பவதில் இத்தனை உயிர் எப்படி பலியானது என்பது குறித்து விசாரிக்க, அவசியம் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ஐசக்-அய்யா தெரிவித்துள்ளார்




