Tenkasi:மனைவி கொலை வழக்கு .. ஜாமீனில் வந்த கணவர்- கடைசியில் நேர்ந்த கொடூரம்!

Advertisements

மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கணவர் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் தெற்கு மாசி வீதி பகுதியில் முதியவர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம்குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாகத் தென்காசி காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இந்தச் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தென்காசி மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரன் (56) என்பது தெரியவந்தது.

கடந்த ஆண்டு தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரன், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்துள்ளார். மனைவியைக் கொலை செய்தால் மன அழுத்தத்திலிருந்துள்ளார்.

இதனால் கத்தியால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *