
சென்னை:
இந்தியா தனது 100வது ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியுள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய சாதனையைப் படைக்க இருக்கிறது.
சந்திரயான், மங்கள்யான் மற்றும் அதித்யா எல்-1 போன்ற விண்வெளி திட்டங்களால் சர்வதேச அளவில் இந்தியாவை உயர்த்திய இஸ்ரோ, நாளைத் தனது 100வது ராக்கெட்டை ஏவுகிறது.
GSLV F15 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ராக்கெட், NVS-02 எனும் பெயரில் 2 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்கிறது.
இந்தச் செயற்கைக்கோளின் நோக்கம் நேவிகேஷனை துல்லியமாகக் கொடுப்பதுதான். இந்தியாவை விட்டு 1500 கி.மீத்தொலைவில் நீங்கள் இருந்தால் கூட, எங்கு இருக்கிறீர்கள் என்பதை இந்தச் செயற்கைக்கோள் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடும்
ஏற்கெனவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி NVS-01 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு ஏவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
