பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கம் : முதுகில் குத்தியவர்கள் பட்டியல்..! 

Advertisements
அண்ணாமலையை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஒழித்து விட வேண்டும் அரசியலில் அவரது அட்ரஸ் இருக்கக் கூடாது என்று திரை மறைவில் சிலர் வேலை செய்கிறார்கள். இதன் நிமித்தமாக விரைவிலேயே பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவர் பதவியில் கொடி கட்டி பறந்தவர் அண்ணாமலை. திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நடைபயணங்கள் ஆளுநரிடம் புகார் மனுக்கள் என்பதோடு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியவர் அண்ணாமலை.
அவரது தீவிர முயற்சியால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வெகுவேகமாக வளர்ந்தது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு நைனார் நாகேந்திரன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதன் பின்னணியில் உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் ஒன்று அண்ணாமலைக்கு எதிராக இருந்ததாக சொல்லப்படுகிறது
அதாவது தமிழகத்தில் அண்ணாமலை பிரச்சாரத்தால் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்ததை விட அவர் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு விட்டார் . தமிழக பாஜகவினர் அண்ணாமலை பின்னால் அணிவகுத்து நிற்கிறார்களே தவிர இவர்கள் உண்மையிலேயே பாரதிய ஜனதா கட்சியின் தீவிர பணி செய்பவர்களாக இல்லை .
மேலும் தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் சிறிதளவு கூட வளரவில்லை தனது பதவியை பயன்படுத்திக் கொண்டு அண்ணாமலை தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்தி விட்டார்.  தொடர்ந்து அவர் பதவியில் நீடித்தால் அவரது செல்வாக்கு மட்டுமே உயரும். மற்றபடி பாரதிய ஜனதா கட்சிக்கு பலன் எதுவும் இல்லை என உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது .
இது அல்லாமல் அண்ணாமலை தனது இஷ்டப்படி முடிவு எடுத்து மனம் போன போக்கில் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்தது . இந்த நிலையில் தான் அண்ணாமலை யின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு நைனார் ராஜேந்திரனுக்கு அந்த பதவி தரப்பட்டது .
அதேசமயம் அண்ணாமலைக்கு இன்னமும் புதிய பதவி வழங்கப்படாததன் பின்னணியும் இந்த காரணத்தால் தான் என்கிறார்கள் . அவருக்கு பதவி கொடுத்தால் தனது செல்வாக்கை வளர்த்து விடுவார் என்ற காரணத்தினால் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே அண்ணாமலையின் செயல்பாடுகள் அனைத்தையும் திரைமறைவில் வேவுபார்த்து குறிப்பிட்ட பலர் டெல்லிக்கு அவ்வப்போது தகவல் சொல்லி வருகிறார்கள் . அவர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் நைனார் ராஜேந்திரன் குருமூர்த்தி மரியதாஸ் கே டி ராகவன் என பலர் இருக்கிறார்கள். அண்ணாமலை முதுகில் குத்துபவர்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர்தான்.
தற்பொழுது அண்ணாமலை வாங்கிய நிலம் குறித்தும் இவர்கள்தான் திரை மறைவில் உள்குத்து வேலைகளை நடத்தி வருகிறார்கள் என்று பேசப்படுகிறது . இது அல்லாமல் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார். அல்லது திமுகவில் இணையும் திட்டத்திலும் இருக்கிறார் என்ற தகவலும் டெல்லி மேல் இடத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளது .
தற்பொழுது அவர் சொத்து வாங்கிய விவகாரத்தை முன்னிலைப்படுத்தி விரைவிலேயே அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிகிறது .
தன்னை கட்சியை விட்டு நீக்கி விடலாம் என்பதை  முன்னதாகவே தெரிந்து கொண்டதால்தான் அண்ணாமலை அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய பிறகு இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *