கோயம்புத்தூரில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறவுள்ளது..!

Advertisements
கோயம்புத்தூரில் இந்தியாவிலேயே முதல் முதலாக உலக புத்தொழில் மாநாடு நடைபெறவுள்ளது என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே அழகர்கோவில் சாலையில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் நிறுவன நிகழ்ச்சியை தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.
இதில்,   பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவிலேயே முதல் முதலாக உலக புத்தொழில் மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து, வருகின்ற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டினை தமிழக முதல்வர் தொங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, 39 நாடுகளிலிருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
 பின்னர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன், 315 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது என்றார். இதில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *