ஒரே நாளில் தெருநாய் கடித்துப் பத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஒரே நாளில் தெருநாய் கடித்துப் பத்துக்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் நடந்து சென்ற பெண்மணி மீது பாய்ந்த தெருநாய் அவரது கையில் கடித்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் நாயைத் துரத்திவிட்டுப் பெண்மணியை மீட்டுக் கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்தபின் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நாய் அவ்வழியாக வந்த பொதுமக்களில் பத்துக்கு மேற்பட்டோரைத் துரத்தித் துரத்திக் கடித்தது. அவர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *