முருங்கை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ?

Advertisements

முருங்கை கீரையின் நன்மைகள்.

முருங்கையின் அனைத்து பாகங்களும் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே தமிழர்களின் உணவு பழக்கங்களில் அதிகளவு முருங்கை கீரையை பயன்படுத்துகின்றன. சரி இந்த முருங்கை கீரையை நமது அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும், முருங்கை கீரையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது போன்ற விவரங்களை இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

சுகப்பிரசவம் ஆக:

கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தங்களுடைய அன்றாட உணவு முறையில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வதன் மூலம் தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் தங்களுக்கு சுகப்பிரசவமும் ஆகும்.

முடி அடர்த்தியாக வளர:

நாளுக்கு நாள் மாறிவரும் லைப்ஸ்டைல் காரணமாக அனைவரும் நமது உடல் நலத்தை பற்றி அதிகம் கவனிக்காமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தான் முடி உதிர்வு. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு உணவு முறையில் அதிகளவு முருங்கை கீரையை சேர்த்து கொள்ளுங்கள். இந்த முருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து தங்கள் முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். மேலும் இளநரை பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து முருங்கை கீரையில்,செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இளநரை நீங்கி, முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *