PmModi: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சென்னை : பாம்பன் ரயில் பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2ல் தமிழகம் வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாலத்திற்கு, 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில், ரயில் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.

வரும் அக்., 2ல் பாலம் திறப்பு விழா நடத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி, தமிழகம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் அவர் துவக்கி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *