
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழை எச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக இன்று வலுவடைகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், வட இலங்கையையொட்டியக் கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, வருகின்ற 29 ஆம் தேதி தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30 ஆம் தேதி சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன், காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.



