திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

Advertisements

மு க ஸ்டாலின் கையில் இருக்கும் வேட்பாளர் பட்டியல் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் உத்தேச வேட்பாளர் பட்டியலை தயாரித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தற்பொழுது திமுகவில் அமைச்சர்களாக இருப்பவர்கள் மற்றும் எம்எல்ஏவாக இருப்பவர்கள் யார் யாருக்கு திரும்ப வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.பெரும்பாலும் திமுக தரப்பில் புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் தரப்பட இருக்கிறது இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் மு க ஸ்டாலினை பொறுத்தவரையில் தனது பாரம்பரிய தொகுதியான கொளத்தூரில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் துணை முதல்வர் மற்றும் இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.முக்கிய அமைச்சர்களான கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி டி ஆர் பி ராஜா தங்கம் தென்னரசு மனோ தங்கராஜ் சேகர் பாபு மா சுப்பிரமணியன் சட்ட ஆகியோர் ஏற்கனவே போட்டியிட்ட தங்களது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

பெரும்பாலான மாவட்டங்களில் புது முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது.பெரம்பலூரில் எஸ் எஸ் சிவசங்கர் போட்டியிடுகிறார் ஆலங்குடியில் மையநாதன் போட்டியிடுகிறார் திருக்கோவிலூரில் கௌதம சிகாமணி போட்டியிடுகிறார் காங்கேயத்தில் எம்பி சாமிநாதன் போட்டியிடுகிறார் இவர்கள் அனைவரும் புதிதாக தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள்.திமுக தரப்பில் செந்தில் பாலாஜிக்கு எந்த தொகுதி என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது

அவருக்கு மீண்டும் கரூர் தொகுதி தான் என்பது திட்டவட்டமாக முடிவாகி இருக்கிறது.இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் பி டி ஆர் தியாகராஜன் சென்னை அண்ணா நகரில் கார்த்திக் மோகன் மன்னார்குடியிலா டிஆர்பி ராஜா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.ராசிபுரம் ரிஷிவந்தியம் சங்கராபுரம் கீழ்பெண்ணாத்தூர் ஆகிய தொகுதிகளில் புது முகங்கள் போட்டியிடுகிறார்கள்.இதே போல் தென்காசி ஆலங்குளம் விருதுநகர் ராஜபாளையம் மானாமதுரை போன்ற தென் மண்டலங்களில் பெண்கள் மற்றும் இளம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் மீண்டும் போட்டியிடுகிறார் ராதாபுரத்தில் அப்பாவு போட்டியிடுகிறார் அம்பாசமுத்திரத்தில் பிரபாகரன் போட்டியிடுகிறார் ஈரோடு கிழக்கில்  சந்திரகுமார் போட்டியிடுகிறார் சங்கரன்கோவில் தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கும் ராஜா மீண்டும் போட்டியிடுகிறார்.இதற்கிடையே கமலஹாசன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மைய கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மைய கட்சியை சேர்ந்த தொழிலதிபர் முருகானந்தம் ஓய்வு பெற்ற ஐஜி மௌரியா அல்லது கவிஞர் சினேகன் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *