டி20 கிரிக்கெட்டில் புது மைல்கல் எட்டிய ரஷித் கான்!

Advertisements

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரான எஸ்.ஏ.20 தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ரஷித் கான் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 633 விக்கெட்டுகளை எட்டினார்.

இது டி20 கிரிக்கெட்டில் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாக மாறியது. முன்னதாக டி20 கிரிக்கெட்டில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தி டுவேன் பிராவோ அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக இருந்து வந்தார்.

26 வயதான ரஷித் கான் சர்வதேச டி20 போட்டிகளில் 161 விக்கெட்டுகளையும், உள்ளூர் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் 472 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பிரான்சைஸ் கிரிக்கெட்டை பொருத்தவரை ரஷித் கான் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்கஸ், சசெக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

461 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ரஷித் கானின் சராசரி 18.08 ஆகும். டுவைன் பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவரது சராசரி 24.40 ஆகும். ரஷித் கான், டுவைன் பிராவோ வரிசையில் சுனில் நரைன் (574 விக்கெட்டுகள்), இம்ரான் தாஹிர் (531 விக்கெட்டுகள்) மற்றும் ஷகிப் அல் ஹாசன் (492 விக்கெட்டுகள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *