கோவில்பட்டியில் சட்டசபையை கூட்டும் போது எலும்பை உடைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என தமிழக முதல்வர் விஜய்யை வார்த்தையால் சரமாரியாக தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. வாழ்த்த போன இடத்துல தவெக முதல்வர் விஜய் அவர்களை நாராச வார்த்தையால் வாழ்த்தியிருக்கிறார்.இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழக மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது.
இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள். ஆனால் சட்டசபையில் உங்கப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன் என விஜய் விமர்சித்துள்ளார். இது போல் ஒரு பேச்சை நான் உலகத்திலேயே கேட்டதில்லை.
எங்களை என்ன கோமாளிகள்னு விஜய் நினைக்கிறாரா, சட்டசபைக்குள் வைத்து பார்த்துக் கொள்வோம். சட்டசபையை கூட்டும் போது விஜய்யின் எலும்பை உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். தைரியமிருந்தால் சட்டசபையை கூட்டி பார்க்கட்டும். இப்படியெல்லாம் தமிழக முதல்வரை விமர்சனம் செய்த அவரை காவல்துறை கைது செய்தது. இதுவரை திமுக தலைவர் ஸ்டாலினும் எந்த குரலும் கொடுத்த மாதிரி தெரியலை..
ஆனால், பேரவை வளாகத்திற்கு வெளியே அல்லது தனிப்பட்ட இடங்களில் எம்எல்ஏவை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு தமிழக மக்களிடையே வருத்தம், கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். அவர் பேசியது குறித்து எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டால், சட்டப்பேரவை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆக தமிழக முதல்வரையே தாறுமாறாக கிழித்து கைதாகி இருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது சட்டமன்ற உறப்பினர் சாபநாயகர் கடுமையான நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..


